Tuesday 27 November 2018

ஒரு சொட்டு வைரம் உன் அன்பு
ஒரு சொட்டு வைரம் உன் அன்பு
---------------------------------------------------
எனது இனிய நண்பர் ஓட்டமாவடி அரபாத், ''நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்" எனும் அவர் பத்தி எழுத்துக்களின் தொகுப்பை என் வாசல் தேடி வந்து தந்து விட்டு, "ஒரு சொட்டு வைரம் உன் அன்பு" என்று நிரூபித்துச் சென்றார்.
அரபாத் - 'மூத்தம்மா' என்ற கதையை அன்று வெளி வந்த, 'சரிநிகரி"ல் படித்து நான் அழுதிருக்கிறேன்; இதே போல் பாடப் புத்தகத்தில் அந்தக் கதை வந்திருக்கும் போது, எனது இளைய மகன் படித்து விட்டுக் 'கண் கலங்குது வாப்பா' என்கிறான்.
இப்படிப் பலரையும் தகர்த்த உங்கள் கதைகளுக்குப் பின் சோவெனக் கொட்டிய மழைதானா அரபாத் இந்த நீர் ஊஞ்சல்?
எஸ்ஸெல்லம் சொல்வது போல்
"படிப்பவர் மனதில் பரவசத்தையும் தமது உசுக்குட்டிப் பருவத்தின் நினைவுகளையும் நம் ஒவ்வொருவரின் மனத்திலும் பிரவாகமாக ஓடச் செய்திருக்கிறார்."
உங்களின் முதல் அத்தியாயத்தின் சிலும்பில் சிலாகித்து உங்களை உச்சி முகர்ந்திருக்கிறது வறுமை.
கொடூர வறுமையின் காலம் அது.
பொழுது விடிந்தால் டீக்கும் உணவுக்கும் கடன் கேட்க ஆள் தேடும் காலத்தில் நீங்கள் ரெயில் ஏறி வியாபாரம் செய்து சில்லறைகளைச் சேர்த்து அற்ப சொற்பமாகப் பசியாறும் நிலையிலும் இடைவிடாது நீங்கள் கவிதை மனதுடன் வாழ்வும் சாவுமாய் இருந்தீர்கள்.
உங்கள் வாழ்க்கைக்கான ஒரே ஒரு ஆன்மத் துணையாக எழுத்து மட்டுமே இருந்தது. அதனை எந்தக் கணத்திலும் விடாது உங்கள் விரல் பற்றியபடியே வந்து கொண்டிருந்தது அது.
உங்களால் அதைக் கேடயமாகவும் கொள்ள முடிந்தது.
தொப்புள் கொடி அறுபடும் முன்பே ஆர்வத்துடன் தூக்கும் குழந்தையைப் போன்று ஒவ்வொரு அத்தியாயங்களையும் படிக்க முடிகிறது அரபாத்.
பள்ளிப் பருவச் சித்து விளையாட்டுகளில் எல்லாச் சிறுவர்களையும் போல் இறங்கிய நீங்கள் அரசியல் வாழ்பனுபங்கள் என்ற நிழல்களோடும் பயணிக்கிறீர்கள்.
நடு வழியில் நம்மை ஆழப்படுத்திய உங்கள் கதைகளுடன் கழித்த எண்ணற்ற இரவுகளின் மனப்பூர்வீகமான ஒரு பெருமிதம் இந்த நினைவுகளில் தொங்குகின்றது.
நன்றி அரபாத்.
-நபீல்.

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...