Tuesday 4 April 2017

”மூத்தம்மா”

இன்று காலை மட்/ ஏறாவுர் அலிகார் தேசிய பாடசாலையில் விஷேட செயலமர்வொன்றில் கலந்து கொண்டேன். க.பொ.த சா.தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எனது “மூத்தம்மா“ சிறு கதை தொடர்பாக விரிவுரை நிகழ்த்துமாறு கேட்டிருந்தனர். 
கதைக்கான பின்புலம், கதையின் உள்ளடக்கம், கதையின் முடிவு மற்றும் அதில் இடம்பெற்றுள்ள பாத்திரங்கள் மண்வாசனை சொற்களின் அரும்பத விளக்கம். போன்ற தலைப்புகளில் மாணவர்களுக்கு விளக்கமளித்தேன்.

இலக்கியப்பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள ”மூத்தம்மா” கதை குறித்த மாணவர்களின் ஐயங்களுக்கும் விளக்கம் சொல்லப்பட்டது .

.இன்றைய நிகழ்வை பாடசாலையின் அதிபர் மற்றும் தமிழ் பாட ஆசிரியர்கள் ஒழுங்கு செய்திருந்தாலும் கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மவ்ஜீத் அவர்கள் என் வருகைக்கு பின்புலமாய் அமைந்தவர் என்பதனை நன்றியுடன் நினைவு கூறிக்கொள்கின்றேன்.

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...