அறிமுகம்

ஓட்டமாவடி அறபாத்

பிறப்பு: 1970.02.17

தந்தை : முஹம்மதலியார் சாகுல் ஹமீது

தாய் :  நாகூர் லெப்பை மர்யம் பீவி

பிறந்த இடம் : ஓட்டமாவடி

இரு சகோதரர்கள் ஜுனைதீன், நவ்பர்

இரு சகோதரிகள் ஜனுபா,சிறாஜுன்னிஸா

திருமணம் முடித்து குழந்தைகளுடன் வாழ்கிறார்கள்

கல்வி : ஆரம்பக்கல்வி அல்குர்ஆனின் அலிப்ஃ,பே ராவியத்தும்மா என்ற அம்மையாரிடம்.எனது தாயின் சிநேகிதி.

ஊரில் பெரும்பாலானோர் அவரிடத்தில்தான் குர்ஆன் கற்றிருப்பர்.

பின்பு வாழைச்சேனை ஹனீபா மௌலவியிடத்தில் முழுக்குர்ஆனையும் பயின்று முடித்தேன்.

ஆரம்ப பாடசாலைக்கல்வி ஓட்டமாவடி முஸ்லிம் வித்தியாலயம்.அப்போது ஆண் பெண் கலவன்.7ம்ஆண்டு வரை அங்கே படிக்கக்கிடைத்தது.

பின்னர் அக்கரைப்பற்று மன்பஉல் கைறாத் அறபுக்கல்லூரியில் அறபு மொழியில் ஷரீஆக்கல்வி கற்பதற்கென வாப்பா கொண்டு போய் விட்டார்.அங்கு ஒரு வருடம் 1985 இல் அட்டாளைச்சேனை கிழக்கிழங்கை அறபுக்கல்லூரியில் இணைந்தேன்.எழுத்தின் முனை கூர்மையாக்கப்பட்ட இடம் அதுதான்.

நூலகத்தில் இருந்த நூல்களில் என்னால் வாசிக்கப்படாத நூல்கள் இல்லை என்ற அளவிற்கு வாசிப்பு.மௌலவி முஹம்மது பாகவி என்ற எனது ஆசிரியரின் ஊக்கமும், உற்சாகமும் எழுதத்தூண்டியது.

 நண்பர் பௌசர்,மஜீது,ஆத்மா,ரஷ்மி போன்ற இலக்கிய நண்பர்களின் அறிமுகமும் நட்பும் இக்காலப்பகுதியில்தான் கிடைத்தது.எழுவெட்டவான் மைதானத்தில் மாலை நேரத்தில் எங்கள் சந்திப்பு நிகழும்.

1991 இல் பாலமுனை ஸஹ்வா அறபுக்கல்லூரியில் மௌலவி அல்ஆலிம் பட்டம் பெற்றேன். அதே ஆண்டில் கிழக்குப்பல்கலைகழகத்திற்கு தெரிவானேன்.

அன்று நிலவிய தமிழ் முஸ்லிம் உறவின் நிலையாமை அங்கு செல்ல முடியாத சூழலை தோற்றுவித்தது.

தொழில் நிமித்தம் 1992 இல் கண்டி பல்கும்புர என்ற இடத்திற்கு வந்தேன். 1993 இல் தென்கிழக்கு பல்கலைக்கழகம் அங்கு வந்து கல்வியைத்தொடர அழைப்பு விடுத்தது. குடும்பத்தில் நிலவிய  பொருளாதாரம் செல்ல விடவில்லை.

பேராதனை பல்கலையில் வெளிவாரி மாணவனாக இணைந்து பட்டப்படிப்பை முடித்தேன்.

தொழில் : அரச சேவை :  ' அபிவிருத்தி உத்தியோகத்தர். '(  Economic Development officer)
வாழைச்சேனை கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் 2012.7.2 ம்திகதி முதல் 2020.8.19 வரை.

2020.8.20 ம்திகதி ஏறாவுர் நகர பிரதேச செயலகத்திற்கு இடம் மாற்றம் பெற்றுச்செல்லல்

1999-08-25 இல் திருமணம் . மனைவி: சுஹா

நான்கு  குழந்தைகள். உமைர் ஹம்தான்,ஷைத் அம்மார்,அமாறா சிரீன்,அம்றா ஷெரீன்

எழுதத்தொடங்கியது  1985

பிரசுரம் பெற்ற முதல் கவிதை

'பூவொன்று சிரிக்கிறது"

1986 அல்ஹசனாத்

பிரசுரம் பெற்ற முதல் சிறுகதை

'விருந்தாளிகள்"

1986 அல்ஹசனாத்

1989-1991 வரை எழுதிய பத்திரிகைகள்

அல்ஹசனாத்

எழுச்சிக்குரல்

பாமிஸ்

நேசன்

தாரகை

வான்சுடர்

தினமுரசு

தினக்கதிர்

படிகள்

களம்

மித்திரன்

சிந்தாமணி

உதயம்

படிகள்

தீவிர எழுத்து வாசிப்பு 1992க்கு பின்

ஊக்கம்

எஸ்.எல்.எம்.ஹனீபா

நண்பர் எம்.பௌஸர்

பின்பு எழுதிய பத்திரிகைகள்

சரிநிகர்

ஆதவன்

அம்மா பிரான்ஸ்

எக்ஸில் பிரான்ஸ்

தினகரன்

மீள்பார்வை

எங்கள் தேசம்

வீரகேசரி

தினக்குரல்

விருதுகளும் பரிசில்களும்

1994- சரிநிகர் நடாத்திய வானமே எல்லை சர்வதேச சிறுகதைப்போட்டியில்

'வேப்ப மரம்" சிறுகதை

1995 விபவயின் சுதந்திர இலக்கிய விழா கவிதைக்கான விருது

1995/1996 விபவியின் சுதந்திர இலக்கிய விழா சிறுகதைக்கான விருது

1995 மக்கள் சமாதான இலக்கிய விழா சிறுகதைக்கான விருது (அவனும் மனிதன்தான்)

1996- தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கவிதைக்கான விருது

1996- தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சிறுகதைக்கான விருது

1996- இலங்கை முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்தின் விருது (சுமை தாங்கிகள் சிறுகதைக்கு)

1998 விபவியின் சுதந்திர இலக்கிய விழா விருது 'நினைந்தழுதல்" சிறுகதை தொகுதிக்கு (1998 ம்ஆண்டின் சிறந்த சிறுகதைத்தொகுதி)

2002- தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் பரிசும் விருதும்

'ஆண்மரம் " சிறுகதைத்தொகுதிக்கு

 'உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி"சிறுகதைத்தொகுதி 2008ம் ஆண்டின் சிறந்த தொகுதிக்காக கிழக்கு மாகாண சபை இலக்கிய விருது

அதே ஆண்டில் இலங்கை அரசின் சாஹித்ய மண்டல பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்டு சான்றிழ் பெற்றது.

இலக்கிய படைப்புக்கள் விபரம்

1-   எரி நெருப்பிலிருந்து  1996

2-   தப்லீக் அன்றும் இன்றும் 1998 (சமய விமர்சனம்)

      நான்கு பதிப்புகள்

3-   தஃலீம் தொகுப்பு குர்ஆனுக்கு எதிரானதா ? (சமய விமர்சனம்)

     2 பதிப்புக்கள்

4-  நினைந்தழுதல் 1998

5-  இஸ்லாமும் சர்வமதக்கோட்பாடும் 1999 (ஆய்வு)

6-  ஆண் மரம்              சிறுகதைத்தொகுதி

7-  சூபித்துவத்தின் உண்மை நிலை 2001    (மொழி பெயர்ப்பு)

8-  வேட்டைக்குப்பின்       கவிதைத்தொகுதி 2004

9-  ஈமானின் கிளைகள்      கட்டுரைகள் 2005

10- நினைவின் முட்கள்       (அரசியல் கட்டுரைகள்) 2007

11- உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி                       (சிறுகதைத்தொகுதி) 2008   அடையாளம் பதிப்பகம்   

12-   நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் -  2017 ( சுய சரிதை குறிப்புகள்)

          காலச்சுவடு பதிப்பகம்    தமிழ்நாடு,  இந்தியா

தொடர்புகளுக்கு : 159,MPCS.FRONT ROAD
                                       MAVADICHENAI,VALAICHENAI 30400. SRILANKA.

தொலை பேசி இலக்கம் :  0777761479    /   0719493939

E-mail     :                                  arafathzua@gmail.com
வாட்சாப்                                0719493939

 2011.09.07ம் திகதி பதிவு செய்யப்பட்டது.
2015.11.13 மீள் திருத்தம் செய்யப்பட்டது.
2020.11.01 மீள் திருத்தம் செய்யப்பட்டது.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...