Thursday 14 June 2018

ஓட்டமாவடி அரபாத்தும் ஏறாவூர் சப்ரியும்




ஓட்டமாவடி அரபாத்தும் ஏறாவூர் சப்ரியும்
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
மே மாதம் மூன்றாம் திகதி……வெறித்தனத்தில் ஜஸ்டின் பீபரின்வெஸ்டர்ன் ஆடிக் கொண்டிருந்தது வெயில்…..அவிந்து துடிக்கின்ற கடல் படு பயங்கரமாக ஆவியாகிக் கொண்டிருக்கின்ற நடுப்பகல் பொழுது….இரண்டு மணியிருக்கும்,…..வழமைக்கு மாறாக நேரத்தோடு கோர்ட்டிலிருந்து வீட்டுக்கு வந்து விட்டேன்…வியாழக் கிழமைகளில் வழமையாக வீடு வர ஐந்து அல்லது மணியாகி விடும். இன்று நீதவான் நீதிமன்றத்தில் துலக் முதலியார் எனப்படுகின்ற மொழிபெயர்ப்பாளர் கல்தா என்பதால் எல்லா விளக்க வழக்குகளும் வாயிதா………அதனால்தான் இந்த ஏர்லி ரிட்டேர்ன்………….மனைவியின் அண்ணல் நகர் உம்மா வீட்டில் மூத்தவன் அரீப் முராதிடம் மழலை பாஷை கற்றுக் கொண்டிருந்தேன்.
“அஸ்ஸலாமு அலைக்கும்…சபருள்ளாஹ் எங்கே இருக்கிறீங்க” செல்லின் மறு முனையில் ஓட்டமாவடி அரபாத்….”
வஅலைக்குமுஸ்ஸலாம்…எப்படி இருக்கீங்க…எங்க இருக்கீங்க……” சடர்ன் சேர்ப்ரைஸ்
“ட்ரின்கோக்கு ஒரு வேலையா வந்தேன்……வேல முடிஞ்சி ஒன் த வே ட்டூ ஊர்………இப்ப கிண்ணியாவ நெருங்கிக்கிட்டு இருக்கேன்….சந்திக்கலாமா”
“வை நொட்…….வித் ப்ளெஷர்” உற்சாகமானேன்.
ஓட்டமாவடி அரபாத்தை நீண்ட காலமாகத் தெரிந்தாலும் பத்து பதினைந்து வருட இடைவெளியில் இரண்டாம் தடவை சந்திக்கப் போகின்றேன்…..இந்த முறை ஃபுல் பெக்கேஜில்………………இலக்கியர்களை சந்தித்து உரையாடுகின்ற தருணங்கள் நுரைக்கின்ற ஷாம்பைன் சமாச்சாரம்…..அதுவும் ரியல் இலக்கியக்காரர்கள் என்றைக்குமே ரெஃப்ரெஸ்ஷிங் மோட்……அவர்களை சந்தித்து உரையாடுதல் என்பதே போன்விட்டா ப்ளஸ் ஹோர்லிக்ஸ் கலவையில் இம்மீடியட் எனர்ஜி.
கிண்ணியாப் பாலத்தைக் கடந்து அப்படியே மட்டக்கிளப்பு வீதியால் முச்சந்தியைக் கடந்து வந்தால் தோனா பீச்சுக்கு முன்னால் வடிகட்டப்பட்ட காற்றை வாசித்தவாறு இருக்கின்றது கிண்ணியா பாயிஸா அலியின் வீடு. அங்கு வந்து பாயிசா அலியோடு பேசிக் கொண்டிருப்பதாக தகவல் தந்தார்கள். மகன் அரீபையும் அள்ளிக் கொண்டு கவிதாயினி பாயிசா அலி வீட்டுக்கு சென்றேன். அல்ஹம்துலில்லாஹ் ஓட்டமாவடி அரபாத்..அவருக்கு அருகாமையில் முகத்தில் தாடிக்கு வெளியே எட்டிப்பார்க்கின்ற புன்னகையோடு ஏறாவர்ர் சகோதரன் சப்ரியும்….இரண்டு பேருக்கும் கை கொடுத்து சலாம் சொல்லி “கிளாட் ட்டூ மீட் யூ”
அரபாத் சகோதரர் சப்ரியை அறிமுகப்படுத்தினார். ஃபேஸ் புக்கில் சப்ரி எனது ஃப்ரென்ட் லிஸ்டில் இருக்கின்றார். ஆனால் இன்றுதான் லைவ் இன் கன்சேர்ட். நிஜத்தில் பார்த்து பேசுவதென்பது அலாதியானது. அதனை ஃபேஸ் புக்கால் என்றைக்குமே தர முடியாது. சாரி மார்க் சக்கர்பெக்.
நெடு நேரம் அங்கே பேசக் கிடைக்கவில்லை…அப்போதுதான் பாயிசா அலியும் அவரது கணவரும் பாடசாலை விட்டு வந்திருக்க வேண்டும்…பாடசாலைக் களைப்பை முகத்தில் ப்ளாஸ்திரி போட்டு ஒட்டி வைத்திருந்தனர். இருவரும் கற்றுத் தருனர்கள். ஆனாலும் அலுப்பில்லாத புன்னகை…..அதற்கிடையில் பாயிசா அலியின் தயாரிப்பில் பப்பாளி ஜூஸ்……கொஞ்ச நேரம் அங்கிருந்து பேசி விட்டு அதே மட்டக்கிளப்பு வீதியால் பயணம் செய்து கடலூருக்கு அருகில் கடலை அண்டிய படி பிரதான வீதியில் இருக்கின்ற அகன்று விரிந்த ஆல மரத்தின் கீழ் வந்து சேர்ந்தோம்.
எங்களோடு கவிதை நண்பர்கள் பெரோஸ்கானும்…அதற்கப்புறம் நஸ்புல்லாவும் பட்டியலில் இணைந்து கொண்டார்கள். ஐவரும்….மன்னிக்கவும்…என்ட மோனோடு சேர்த்து ஆறு பேரும் வட்டமாக கலர் மங்கிப் போன ப்ளாஸ்டிக் கதிரைகளில் அமர்ந்து கொண்டு……வேறு என்ன…இலக்கியம்…இலக்கியம்…இலக்கியம்………இலக்கியத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்கின்ற ஜோனருக்குள்ளே அடுத்து வருகின்ற இரண்டு மணித்தியாலத்துக்கு தேசப் பிரதிஷ்டம் செய்யப்பட்டோம்.
அரபாத் கடந்த காலத்தைய நினைவுகளை ஃப்ளாஷ்பேக் அடித்தார். சகோதரர் சப்ரியின் வார்த்தைகளில் அவர் ஆழமான வாசிக்கின்றார் என்பதனை கண்டு பிடிக்க அவ்வளவு நேரம் பிடிக்கவில்லை எனக்கு அரபாத்தும் சப்ரியும் நிறையப் பறிமாறினர்…..,நஸ்புல்லாவும் பெரோஸ்கானும் தீராத்தாகத்தோடு இலக்கியத்தில் கை தேர்ந்த இன்னிங்சை ஆடிக் கொண்டிருந்தனர். அதிகம் பேசினோம்…..எல்லாமும் தேவையானவையாகவே இருந்தன.
ஐந்து இலக்கியக்காரர்களின் சுவாரஸ்யமிக்க உரையாடல் எதுவும் “சாரி பாஸ் என்னை பாதிக்கவில்லை” என்ற கணக்கில் எனது மகன் அரீப் அவனது குழந்தை உலகத்தை அங்கே கூட்டி வந்திருந்தான். கொஞ்ச நேரத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்க்ப்பட்டிருந்த படகுக்கருகில் சென்று எதையோ உற்று நோக்கிக் கொண்டிருந்தான்…எங்களது உரையாடல் தொடர்ந்தது. அவ்வப்போது செல்போன் கமராக்கள் ‘ஸ்மைல் ப்ளீஸ்” என்று சொல்லிக் கொண்டிருந்தன.
காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்ற அரபாத்தின் பத்தி எழுத்துகளின் தொகுப்பான “நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சலினை அரபாத் அன்பளிப்பித்தார். அப்புறம் ஏற்கெனவே ஓர்டர் பண்ணியிருந்த தெம்பிலி, சீனி, தேசிக்காய் ஆகிய இன்க்ரீடியன்கள்டங்கிய ஜுசை கடைப் பையன் மரியாதையோடு பரிமாறினான். வாவ்..வாவ்…….கொளுத்துகின்ற வெயிலின் கொடுங்கொலுக்கு செங்கோல் புரிகின்ற இந்த மாதிரி இயற்கை ஃப்ரென்ட்லி பானங்கள் டயறியில் குறித்து வைக்கப்பட வெண்டியவை.
வெயிலெரிக்கினற காலங்களில் கிண்ணியாவில் காளான்கள் லெவலில் திடீரென்று முளைக்கின்ற இந்த மாதிரி சீசனல் பானக்கடைகள் எத்தனையோ இருந்தாலும் இந்த தெருவொரக் கடையில் தருகின்ற தெம்பில் ஜுசுக்குன்னு ஒரு இது இருக்கு…..இதுன்னா ஒரு அது….நுனி நாக்கு ஜென்ம சாபல்யம் அடைந்து தொண்டைக்குழி கண்டாங்கி கட்டிக் கொள்ளுகின்ற கொண்டாட்டம். இந்தக் கடைக்கு அடிக்கடி வந்து தாகத்துக்கு தண்ணி காட்டுவது எனது வழக்கம். அவ்வப்போது சில நாட்களில் தாக சாந்திக்காக எனது ஆட்டம் இங்கேதான் தற்காலிக நிறுத்தம்.
நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சலை அரபாத் திருகோணமலை மறை மாவட்ட குரு முதல்வர் வண. டீ. கிங்ஸ்லி றொபர்ட் அவர்களுக்கு டெடிக்கேட் பண்ணியதற்கான ஜஸ்டிஃபிக்கேஷனை கடந்து போன காலத்தோடு சேர்த்து சொன்ன போது “ஹேட்ஸ் ஓஃப் அரபாத்” என்று சொல்லிக் கொண்டேன்.
இலக்கியம் பேசுகின்ற பொழுதுகளில் நேரம் கடத்தப்படுவது தெரிவதே இல்லை…அந்த மாதிரித்தான் இன்றும்…..பேசிப் பேசித் தீர்த்து….பெரும் சந்தோஷத்தோடு பிரிந்து போது மாலை இருளின் டைட்டில் கடற்கரையில் ஓடிக் கொண்டிருந்தது. நேரமும் தூரமும் இலக்கியக்காரர்களுக்கு எப்போதுமே கணக்கில் இருந்தது கிடையாது.
இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்…பேசுவோம்…..நமது வார்த்தைகளை அல்லாஹுத்தஆலா பொறுந்திக் கொள்ளட்டும்.
கிண்ணியா சபருள்ளாஹ்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...