வட்டிக்கு வம்பிழுக்கும் கூட்டம்
வட்டியின் கொடிய கரங்கள் அனைவரினதும் வீட்டின் கதவுகளையும் வேகமாக தட்டிக்கொண்டிருக்கின்றது.சமூர்த்தி என்ற பெயரில் வீட்டுக்கடன் என்ற பெயரில் மானியம் என்ற பெயரில் போர்வைகளை மாற்றிக்கொண்டு வட்டியின் நிழல் பின் தொடர நாம் அதன் குளிர்ச்சியில் சுகம் காணத்தொடங்கிவிட்டோம்.
வட்டிக்கு விண்ணப்பித்து பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளதாதவர்கள் அதிகாரிகளிடம் வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கு நின்று வம்புக்கிழுத்து சமர் செய்யத்துணிந்து விட்டனர்.
வட்டி நம் சமூகத்தின் கண்களை குருடாக்கியது போல் வேறொன்றும் குருடாக்கவில்லை.
குளிர்சாதனபெட்டி,எல்சி. டிவி.கையடக்க தொலைபேசி,சோபா செட் அலுமாரி,மின்சார உபகரணங்கள் என அனைத்திற்கும் வட்டியின் பெயரால் கடன் வழங்கப்படுகின்றது.
பழைய வாகனங்களை விற்றுத்தொலைத்து விட்டு புதிதாக வாங்கிப்பயணம் செய்ய கம்பனிகள் தயாரா ஆள்பிடிக்க காத்திருந்து கவ்விக்கொண்டு ஓடுகின்றன.
வட்டியில்லாமல் மூச்சுவிடமுடியாத அளவிற்கு வட்டி நம்மை நரகத்தின் குகைக்குள் தள்ளிவிட்டு தீ மூட்டியுள்ளதை அறிந்தும் விழுந்து எரிவதற்கு நாம் தயாராகியுள்ளதை விதி என்பதா அல்லது சதி என்பதா ?
Wednesday, 20 May 2015
Subscribe to:
Post Comments (Atom)
முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத். 2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...
-
இன்று காலை மட்/ ஏறாவுர் அலிகார் தேசிய பாடசாலையில் விஷேட செயலமர்வொன்றில் கலந்து கொண்டேன். க.பொ.த சா.தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு என...
-
வீட்டுக்கு அடங்காத “தல தெறிச்ச“ பிள்ளைகளை வேதம் படிக்கவென வலுக்கட்டாயமாக மதரசாவுக்கு சேர்த்துவிடும் ஒரு காலமிருந்தது. ஆகம நிய...
-
ஓட்டமாவடி அறபாத்தின் “ உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி ” சிறுகதைத்தொகுதியை முன்னிறுத்தி சில குறிப்புகள். எல்லா அழகி...
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.