மாலைத்தேனீர்
ஆறிக்கிடந்தது.
என்னுடன் நீ
பரிமாறிக்கொள்ளும்
ஓராயிரம் கனவுகளும்
விழிகளுள் நொருங்கிச்சிதறின.
தேனீர்க்குவளையின் விளிம்பினிடை
நமது எல்லைகள் விரியும்,
சுதந்திர நினைவின் எதிரொலி நம் விழிகளில் கசியும்.
காலம் முகிழாக்கனவுகளும்
வெகுளித்தனகளுமற்ற ஓர் உள்ளுலகில்
நாம் வாசமிருந்தோம்.
நம் சிநேகிதம்
இப்படித்தான் நித்யம் பெற்றது.
நேற்று முன்னிரவு
என் விரல் தழுவிய
உன் விரல்களின் மென்னுரசல்
இன்னுமென் உள்ளங்கையில் சுடுகிறது.
ஊர் செம்மண் தரையில் கை கோர்த்து
நடக்கையில்- நீ
ஒரு கவிதை போலச்சிரித்து வந்தாய் என்னுடன்.
காலங்கள் நெடுகவும்
இப்படி சிரித்துத்திரிவாய்
என்ற என் கணிப்பீட்டின் மீது
அவர்கள் துப்பாக்கி கொண்டு
அழித்து விட்டு சென்றனர்.
என் பிரிய நண்பனே
குறைந்தபட்சம்
நீ எதற்காக என்றேனும் அறிவாயா?
2000-10-14 - மூன்றாவது மனிதன் - 2000
Subscribe to:
Post Comments (Atom)
முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத். 2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...
-
இன்று காலை மட்/ ஏறாவுர் அலிகார் தேசிய பாடசாலையில் விஷேட செயலமர்வொன்றில் கலந்து கொண்டேன். க.பொ.த சா.தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு என...
-
வீட்டுக்கு அடங்காத “தல தெறிச்ச“ பிள்ளைகளை வேதம் படிக்கவென வலுக்கட்டாயமாக மதரசாவுக்கு சேர்த்துவிடும் ஒரு காலமிருந்தது. ஆகம நிய...
-
ஓட்டமாவடி அறபாத்தின் “ உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி ” சிறுகதைத்தொகுதியை முன்னிறுத்தி சில குறிப்புகள். எல்லா அழகி...
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.