ஏறாவூர் வாசிப்பு வட்டத்தின் பதினான்காவது அமர்வான ஓட்டமாவடி அறபாத்தின் "நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்" நூல் அறிமுகமும் உரையாடலும் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நூலாசிரியர் அறிமுகத்தை மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவும், நூல் தொடர்பான தனது பார்வையை தோழர் மலர்ச்செல்வனும் முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து அறபாத்தின் எழுத்துக்கள் எனும் தலைப்பில் தோழர் ஜிப்ரி ஹாசனும், வாசிப்பு வட்ட செயற்பாடுகள் தொடர்பில் கலாசார உத்தியோத்தர் அஷ்ஷெய்க் நழீம் அவர்களும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்தனர்.
நூலின் ஆசிரியர் ஓட்டமாவடி அறபாத்தினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டது.
இறுதியாக நூல் வெளியீடு இடம்பெற்றது.
இவ்வமர்வுக்கு என்னோடு ஒத்துழைத்த தோழர்களான பைறூஸ், ஜெம்ஸித் ராபி, அஃப்ழல், அஸ்லம், பதுறுஸ்ஸமான்,அல் அமீன், EEDI கல்வி நிறுவனத்துக்கும் மற்றும் அழகாக புகைப்படம் பிடித்துத் தந்த குலாம் முஸம்மில் அவர்களுக்கும் கலந்து கொண்ட அத்தனை உள்ளங்களுக்கும் மிகுந்த நன்றிகள்.
உருட்டிப்பழம் எனப்படும் உக்குரஸ் காய் நாலைந்து கொண்டு வந்த பகிர்ந்த எஸ்.எல்.எம்.ஹனீபா மாமாவுக்கு விஷேட நன்றிகள்.
வழங்கப்பட்ட வாழைப்பழம் கொஞ்சம் பச்சையாக இருந்தமைக்கு மன வேதனைகள்.
தொடர்ந்து பயணிப்போம் தோழர்களே
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.