ஈழத்து இலக்கிய உலகில் உமா வரதராஜனின் வருகை காத்திரமானது. கலாபூர்வமான அவரது பதிவுகள் அனைத்துமே நம்மை களிப்படையச்செய்வது மடடுமல்ல, கணதியாக சிந்திக்கச் செய்பவையும்.....
அண்மையில் ஒரு சிலர் அவர் பற்றிய கற்பனை அவதூறுகளை கதை விட்ட போது நான் மீண்டும் உமாவரதராஜனைத் தேடினேன். அவரது முதல் படைப்பை கண்டடைவதற்காக ஒரு பத்து வருடங்களுக்குரிய நூற்றி இருபது இதழ்களுக்குள் பயணித்த போது நான் அடைந்த பரவசம் சொல்லில் மாளாது.
1972 ல் ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற நாவலுக்கு சாஹித்திய அகடமியினர் பரிசளித்து கெளரவித்த போது அந்த நாவல் பற்றிய விமர்சனங்களை "தீபம்" ஆசிரியர் கேட்டிருந்தார்.
க.பொ.த.உயர்தரம் படித்துக் கொண்டிருந்த வரதராஜன் ஜெயகாந்தனின் நாவல் பற்றிய பார்வையை தனது பதினேழாவது வயதிலேயே பதிவு செய்திருக்கின்றார்.
1973 மார்ச் மாத தீபம் இதழில் ஐந்து விமர்சனக் கட்டுரைகள் இடம் பெறுகின்றது.
ராஜமார்த்தாண்டன்
சு.கிருஸ்ணன்
எம்.வரதராஜன்
இரா.மோகன்.எம்.ஏ
எம்.சுப்பிரமணியன்
முதலியோர் எழுதியுள்ளனர். நமது வரதராஜனே வயதில் மிக இளையவன்
என்கிறார் எஸ்.எல்எம். ஹனீபா அவரின் தலைப்பிரசவத்தை இந்த வலைப்பதிவில் விரைவில் ஏற்றுகின்றேன்.
Sunday, 6 February 2011
Subscribe to:
Posts (Atom)
முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத். 2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...
-
இன்று காலை மட்/ ஏறாவுர் அலிகார் தேசிய பாடசாலையில் விஷேட செயலமர்வொன்றில் கலந்து கொண்டேன். க.பொ.த சா.தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு என...
-
ஓட்டமாவடி அறபாத்தின் “ உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி ” சிறுகதைத்தொகுதியை முன்னிறுத்தி சில குறிப்புகள். எல்லா அழகி...
-
வீட்டுக்கு அடங்காத “தல தெறிச்ச“ பிள்ளைகளை வேதம் படிக்கவென வலுக்கட்டாயமாக மதரசாவுக்கு சேர்த்துவிடும் ஒரு காலமிருந்தது. ஆகம நிய...